எவ்வளவு பேரைச் சென்றடைந்து அவர்களோடு தொடர்பு கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு சென்று சேர காந்திஜி முயற்சிகள் எடுத்தார். பல மொழிகளில் பருவ இதழ்களை வெளியிடுவது என்பது அத்தகைய ஒரு தொடர்பு முறையாகும். காந்திஜியின் பருவ இதழ்கள் என்ற பிரிவு அவருக்குச் சொந்தமான, அவர் பதிப்பித்த அல்லது வெளியிட்ட அனைத்து இதழ்களின் முழு பிரதிகளையும் கொண்டுள்ளது. காந்திஜியின் கருத்துகளும் செயல்பாடுகளும் பலவித இயக்கங்களுக்கும் கல்விப்புல ஆராய்ச்சிகளுக்கும் உந்துசக்தியாக இருந்துள்ளது. பிறரின் இதழ்கள் என்ற பிரிவு காந்திஜியின் கருத்துக்கள், செயல்பாடுகள் அல்லது பதிவு, ஆவணம், காலவரிசை ஆகியவற்றைக் கேள்விக்குட்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் இயக்கங்கள் வெளியிட்ட பருவ இதழ்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பைக் கொண்டுள்ளது.